சென்னை காசிமேட்டில் களைகட்டிய மீன் விற்பனை..!

ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி சென்னை காசிமேட்டில் மீன் விற்பனை களைகட்டியது.
சென்னை காசிமேட்டில் களைகட்டிய மீன் விற்பனை..!
Published on

சென்னை,

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1200க்கு மேற்பட்ட விசைப்படகுகள், 800-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடித் தொழிலில்  ஈடுபட்டு வருகின்றன. இங்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மக்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று விடுமுறை நாள் என்பதால், அதிகாலை முதலே மீன் வாங்க மீன்பிரியர்கள் காசிமேடு மீன் மார்க்கெட்டில் குவிந்தனர். இதனால், மீன் விற்பனை களைகட்டியுள்ளது. வஞ்சிரம், பாறை, வவ்வால், நெத்திலி, சங்கரா, இறால், கடமா உள்ளிட்ட மீன்களை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். ஆனால் மீன் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com