வார விடுமுறை: உறைபனியை அனுபவிக்க ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


வார விடுமுறை: உறைபனியை அனுபவிக்க ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

மினி காஷ்மீர் போல் ஊட்டி காட்சியளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் உறைபனி சீசன் காணப்படும். அந்த வகையில், தற்போது ஊட்டியில் கடும் குளிருடன் உறைபனி நிலவி வருகிறது. பச்சை புல் மைதானங்களில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காணப்பட்ட உறைபனி ரம்மியமாக காட்சியளிக்கிறது.

தலைக்குந்தா பகுதியில் தொடக்கத்திலேயே உறைபனி இந்த முறை வழக்கத்தை விட மிக அதிகமாக காணப்படுகிறது. அதிகாலை நேரங்களில் மலைகளின் மீது வென்மேகம் படர்ந்தது போல் பனிமூட்டம் நிலவுகிறது. ஊட்டியில் உள்ள குதிரைப் பந்தய மைதானம், காந்தல், அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

சாலைகளில் நிற்கும் வாகனங்கள் மீது பனி படர்ந்து காணப்படுகிறது. மினி காஷ்மீர் போல் ஊட்டி காட்சியளிப்பதாக அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இன்று வார விடுமுறை என்பதால், ஊட்டியில் நிலவும் உறைபனியை அனுபவிக்க அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

1 More update

Next Story