போலீசாருக்கு வார விடுமுறை: டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

போலீசாருக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதற்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

போலீசாருக்கு 8 மணி நேர பணி வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது பா.ம.க.வின் நீண்ட நாள் கோரிக்கையாகும் என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டரில், தமிழக காவல்துறைக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஆணையிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. காவலர்களுக்கு வார விடுமுறை என்பது பா.ம.க. நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த கோரிக்கை ஆகும்.

காவலர்களுக்கு 8 மணி நேர பணி வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும் பா.ம.க.வின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். அதையும் நிறைவேற்றி காவலர்களின் நலனை பாதுகாக்க தமிழக முதல்-அமைச்சரும், காவல்துறை தலைமை இயக்குனரும் முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் பதிவிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com