வார விடுமுறை: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குதூகல குளியல்

குற்றாலம் மெயின் அருவியில் குறைவாக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
வார விடுமுறை: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குதூகல குளியல்
Published on

தென்காசி,

குற்றாலத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குற்றால அருவி

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் தற்போது குளுகுளு சீசன் நிலவுகிறது.

இன்று வார விடுமுறை தினம் என்பதால், குற்றாலத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது சீசன் களைகட்டிய நிலையில் மெயின் அருவியில் குளிக்க 3 மாதங்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் சில தினங்களாக மழை பெய்யாத நிலையில், மெயின் அருவி, ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளிலும் குறைவாக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. எனினும் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com