வார இறுதி நாட்கள்: தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை கிளாம்பக்கத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
வார இறுதி நாட்கள்: தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Published on

சென்னை,

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இது குறித்து தமிழக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

"தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் மூலமாக ஜூன் 27( வெள்ளிக்கிழமை) முகூர்த்தம் , ஜூன் 28 சனிக்கிழமை மற்றும் ஜூன் 29 ஞாயிறு வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பக்கத்திலிருந்து , திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 27, 28ம் தேதிகளில் 505 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு 27, 28 தேதிகளில் 110 பேருந்துகள் இயக்கப்படும். சென்னை மாதவரத்திலிருந்து 27, 28 ஆகிய தேதிகளில் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பெங்களூர், திருப்பூர்,ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. "

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com