போடி-தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்

வருகிற 12-ந்தேதி முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
போடி-தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்
Published on

போடி,

போடி-தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரெயில் கடந்த ஜூலை மாதம் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து செப்டம்பர் 12-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில், அதிக அளவில் டிக்கெட் டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரெயில், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு போடி வந்தடையும். பின்னர் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணிக்கு போடியில் இருந்து புறப்படும் ரெயில், திங்கட்கிழமை காலை 6 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

விழுப்புரம், திருச்சி வழியாக இயக்கப்படும் இந்த ரெயிலில் 6 முன்பதிவு இல்லாத பெட்டிகள் உள்ளன. இதில் பெண்களுக்கு தனி பெட்டியும் உள்ளது. முன்பதிவு இல்லாத டிக்கெட் கட்டணம் ரூ.235 ஆகும். இதன்மூலம் சுமார் 600 பேர் வரை பயணம் செய்ய முடியும். இந்த சிறப்பு ரெயில் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com