

ஈரோடு,
பண்டிகை நாட்களை முன்னிட்டு கோவை ஜெய்ப்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. கோவை ஜெய்ப்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 06181) நாளை (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 26-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. வாரந்தோறும் வியாழக்கிழமை கோவையில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமை மதியம் 1.25 மணிக்கு ஜெய்ப்பூர் சென்றடையும். இந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை 4.05 மணிக்கு வந்து, 4.10 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
இதேபோல் ஜெய்ப்பூர் கோவை வாராந்திர சிறப்பு ரெயில் (06182) வருகிற 11-ந் தேதி முதல் அடுத்த மாதம் 29-ந் தேதி வரை இயக்கப்படும். இந்த ரெயில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஜெய்ப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமை கோவை ரெயில் நிலையத்துக்கு காலை 8.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயில் ஈரோட்டுக்கு புதன்கிழமை அதிகாலை 4.50 மணிக்கு வந்து, 4.55 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.