

திருப்பூர்,
அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக ஐதராபாத்தில் உள்ள சார்லப்பள்ளி-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சார்லப்பள்ளி-கொல்லம் (வண்டி எண்.07195) வாராந்திர சிறப்பு ரெயில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 14-ந்தேதி முதல் செப்டம்பர் 4-ந்தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் (4 சேவைகள்) சார்லப்பள்ளியில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
இந்த ரெயில் திருப்பூருக்கு சனிக்கிழமைகளில் நள்ளிரவு 2.25 மணிக்கு வந்து 2.30 மணிக்கு புறப்படும். கொல்லம்-சார்லப்பள்ளி (07196) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 15-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரை சனிக்கிழமைகளில் (4 சேவைகள்) கொல்லத்தில் இருந்து மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் நள்ளிரவு 12.30 மணிக்கு சார்லப்பள்ளியை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 2 மணிக்கு வந்து 2.05 மணிக்கு புறப்படும்.
மேற்கண்ட தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.