திருப்பூர், உடுமலை வழியாக வாராந்திர சிறப்பு ரெயில்கள் சேவை நீட்டிப்பு

பயணிகளின் வருகை அதிகரிப்பால் ரெயில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர், உடுமலை வழியாக வாராந்திர சிறப்பு ரெயில்கள் சேவை நீட்டிப்பு
Published on

திருப்பூர்,

ஐதராபாத்-கொல்லம் வாராந்திர சிறப்பு ரெயில் (எண்.07193) சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் வருகை அதிகரிப்பால் இந்த ரெயில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை (சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 23-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாளை இரவு 11.10 மணிக்கு ஐதராபாத் தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 7.10 மணிக்கு கொல்லம் சென்றடையும். ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.22 மணிக்கு சேலத்துக்கும், 8.20 மணிக்கு ஈரோட்டுக்கும், 9.13 மணிக்கு திருப்பூருக்கும், 10.12 மணிக்கு போத்தனூருக்கும் வந்து சேரும்.

இதேபோல் கொல்லம்-ஐதராபாத் வாராந்திர சிறப்பு ரெயில் (எண்.07194) வருகிற 6-ந் தேதி முதல் அடுத்த மாதம் 25-ந் தேதி வரை இயக்கப்படும் திங்கட்கிழமைகளில் காலை 10.45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப் பட்டு செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு ஐதராபாத்துக்கு சென்றன யும். இந்த ரெயில் திங்கட்கிழமைதோறும் மாலை 6.20 மணிக்கு போத்தனுருக்கும், இரவு 7.18 மணிக்கு திருப்பூருக்கும், இரவு 8.20 மணிக்கு ஈரோட் டுக்கும், இரவு 9.27 மணிக்கு சேலத்துக்கும் சென்றடையும்.

இதேபோல் திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் (எண்.06030) வாராந்திர சிறப்பு ரெயில் பழனி, உடுமலை, பொள்ளாச்சி, போத்தனூர். கோவை வ யாக இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வருகிற 5-ந் தேதி முதல் ஜூன் மாதம் 7-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை களில் இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு அடுத்தநா காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்கிறது. மேலும் மேட்டுப்பா ளையம்-திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரெயில் (எண்.06029) வருகிற 6-தேதி முதல் ஜூன் மாதம் 8-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திங்கட்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் காலை 8.05 மணிக்கு திருநெல்வேலி செ றடையும்.

மேற்கண்ட தகவலை, திருப்பூர் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.”

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com