

பொள்ளாச்சி,
தெலுங்கானாவில் இருந்து செங்கோட்டைக்கு பொள்ளாச்சி வழியாக வாராந்திர ரெயில் இயக்கப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் சார்லப்பள்ளியில் இருந்து போத்தனூர், பொள் ளாச்சி, மதுரை வழியாக செங்கோட்டைக்கு வாராந்திர ரெயில் இயக்கப்படு கிறது. இந்த ரெயில் சார்லப்பள்ளி-செங்கோட்டை இடையே வருகிற 2-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 27-ந்தேதி வரையும், செங்கோட்டை-சார்லப் பள்ளி இடையே 3-ந்தேதி முதல் நவம்பர் 28-ந்தேதி வரையும் இயக்கப்படு கிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சார்லப்பள்ளியில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சிக்கு சனிக்கிழமை காலை 6.53 மணிக்கு வருகிறது. இதே போன்று மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து சனிக்கிழமை மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்து சேருகிறது.
இந்த ரெயில் நல்கொண்டா, மிரியாலகுடா, குண்டூர், தெனாலி, பாபட்லா, சிராலா, ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் இந்த ரெயிலை கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.