பளுதூக்கும் போட்டி - தங்கம் வென்ற ஏட்டுக்கு பாராட்டு...!

பெங்களூரு பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற ஏட்டு திருப்பதி ராஜனை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் பராட்டி கவுரவித்து உள்ளார்.
பளுதூக்கும் போட்டி - தங்கம் வென்ற ஏட்டுக்கு பாராட்டு...!
Published on

நெல்லை,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர ஆயுதப்படை போலீஸ் ஏட்டு திருப்பதி ராஜன் கலந்து கொண்டார். அவர் முதலிடத்தை பிடித்து தங்க பதக்கம் பெற்றார்.

இதையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார், ஏட்டு திருப்பதி ராஜனை நேரில் அழைத்து பாராட்டி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகர ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் டேனியல் கிருபாகரன் உடனிருந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com