தர்மபுரிக்கு வந்த7-வது ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பைகலெக்டர் சாந்தி வரவேற்றார்

தர்மபுரிக்கு வந்த7-வது ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பைகலெக்டர் சாந்தி வரவேற்றார்
Published on

தர்மபுரி:

தர்மபுரிக்கு வந்த 7-வது ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பையை கலெக்டர் சாந்தி வரவேற்றார்.

ஆக்கி சாம்பியன்ஷிப்-2023

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஆக்கி இந்தியா இணைந்து நடத்தும் 7-வது ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப்-2023 போட்டிகள் வருகிற 3.8.2023 முதல் 12.8.2023 வரை சென்னையில் நடைபெற உள்ளது. 7-வது ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், சீனா, மலேசியா ஆகிய நாடுகளின் அணிகள் பங்கு பெறுகிறது.

இப்போட்டியில் இந்திய அணியில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் கலந்து கொள்ள உள்ளார். 7-வது ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் விளையாட்டிற்கு தமிழ்நாடு அரசு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த போட்டி நடைபெறும் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானம் பல கோடிகள் செலவிடப்பட்டு செயற்கை புல் மைதானம் உலக தரத்திற்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளது.

பரிசு கோப்பை

7-வது ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப்-2023 போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசு கோப்பை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் " பாஸ் தி பால் நிகழ்ச்சியை கடந்த 20-ந் தேதி சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த 7-வது ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பைக்கு மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தர்மபுரி நகரில் இந்த பரிசு கோப்பை ஆக்கி வீரர்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து தர்மபுரி குண்டலப்பட்டியில் உள்ள பச்சமுத்து கலை அறிவியல் கல்லூரியில் முடிவடைந்தது. அங்கு இந்த பரிசு கோப்பையை கலெக்டர் சாந்தி வரவேற்று பெற்றுக் கொண்டார். இந்த கோப்பை தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, கோவிந்தசாமி, வெங்கடேஷ்வரன், தர்மபுரி மாவட்ட கபடி கழக தலைவர் பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ. மாதப்பன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com