அரிசி ஆலையில் வெல்டிங் தொழிலாளி தவறி விழுந்து சாவு

அரிசி ஆலையில் வெல்டிங் தொழிலாளி தவறி விழுந்து இறந்தார்.
அரிசி ஆலையில் வெல்டிங் தொழிலாளி தவறி விழுந்து சாவு
Published on

லால்குடி அருகே உள்ள முள்ளால் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 23). இவரது மனைவி விமலாதேவி. சரவணன் பூவாளூர் கிராமத்தில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலையில் நவீன கொள்கலன் அமைக்கும் வெல்டிங் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com