மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

மாற்றுத்திறனாளிகளின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Published on

சென்னை,

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வு தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்படி 1,228 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் அடையாளமாக 5 நபர்களுக்கு இன்று ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. இதே போல் 9,173 பேருக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் விதமாக 5 பேருக்கு மாதம் 1,600 ரூபாய் உதவித்தொகையை முதல்-அமைச்சர் வழங்கினார்.

மேலும் பணிக்காலத்தில் உயிரிழந்த 4 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணையின் அடிப்படையில் பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com