விவசாயிகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

பிரதமர் பங்கேற்ற விவசாயிகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரியில் காணொலி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.
விவசாயிகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
Published on

கிருஷ்ணகிரி:

பிரதமர் நரேந்திரமோடி இமாசலபிரதேசம், சிம்லாவில் இருந்து காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றார். நலிவுற்றோர் நலன் கருத்தரங்கு மற்றும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பில் நல உதவிகள், விவசாயிகளுக்கு மின்னணு முறையில் வழங்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். மேலும் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

இதையொட்டி கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் காணொலி காட்சி மூலம் நேரடியாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, அசோக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com