

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசின் சார்பில் கோத்தகிரி பகுதியில் உள்ள முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் 4,700 பேருக்கு இலவச வேட்டி, வேலைகள் வினியோகம் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் திறன் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகைக்காக மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கோத்தகிரி நேரு பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் செல்வமணி தலைமை வகித்தார். ஆலோசகர் சம்பத், செயலாளர் விஜயா ஆகியோர் மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடைகளை வழங்கினர். இதில் சுமார் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.