மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகளை மாணிக்கம் தாகூர் எம்.பி. வழங்கினார்
மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள்
Published on

பேரையூர்

இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் தமிழக அரசு இணைந்து மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா அலுவலகத்தில் சமூக வலுவூட்டல் முகாம் நடத்தியது. இந்த முகாமில் மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் வரவேற்புரை ஆற்றினார். பேரையூர் பேரூராட்சி தலைவர் குருசாமி முன்னிலை வகித்தார். விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் 175 மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலிகள், செயற்கை கால்கள், நடை பயிற்சி உபகரணங்கள், காதொலி கருவிகள், உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாணிக்கம் தாகூர் எம்.பி. வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொழில் வழிகாட்டி அலுவலர் வெங்கடசுப்பிரமணியன், தாசில்தார் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com