காஞ்சீபுரம் மாவட்ட மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்

காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் சிறுகளத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற்றது.
காஞ்சீபுரம் மாவட்ட மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்
Published on

இதில் ஊரக வளர்ச்சி துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் கடந்த மாதம் 31-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா திருத்தம், பட்டா நகல், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை என 80 மனுக்கள் பெறப்பட்டு உரிய முறையில் தீர்வு காணப்பட்டு 170 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் ஒரு நபருக்கு பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர் மற்றும் வேளாண் துறை சார்பில் விவசாய பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com