திருக்கோவிலூரில் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் பொன்முடி வழங்கினார்

திருக்கோவிலூரில் நடந்த விழாவில் அமைச்சர் பொன்முடி 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
திருக்கோவிலூரில் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் பொன்முடி வழங்கினார்
Published on

திருக்கோவிலூர்,

மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா திருக்கோவிலூர் நகர, ஒன்றிய தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், திருக்கோவிலூர் நகராட்சி தலைவருமான டி.என். முருகன் தலைமை தாங்கினார். நகர தி.மு.க. செயலாளர் கோபி என்கிற கோபிகிருஷ்ணன் வரவேற்றார். ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் வக்கீல் எம்.தங்கம், கண்டாச்சிபுரம் ஜி.ரவிச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.செல்வராஜ், நகர தி.மு.க. அவைத்தலைவர் டி.குணா என்கிற குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., டி.கே.சரவணன், சந்தப்பேட்டை சண்முகம் ஆகியோர் தொடக்க உரையாற்றினார்கள்.

சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளையும், கருணாநிதி ஆட்சியின் பெருமைகள் குறித்தும், அவரது ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்தும் பேசினார்.

இதில் நகராட்சி கவுன்சிலர்கள் ஐ.ஆர்.கோவிந்தராஜன், கந்தன்பாபு, புவனேஸ்வரிராஜா, ஜல்லி பிரகாஷ், ஜெயந்திமுருகன், அண்ணாதுரை, சண்முகவள்ளிஜெகநாத், துரைராஜன், பிரமிளா ராகவன், உஷாவெங்கடேசன், தமிழ்வாணிஅருள், ஷப்னம், மாவட்ட பிரதிநிதி ரியல் எஸ்டேட் சுப்பிரமணி, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் வெங்கட், மகேஷ், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் என்.கே.வி.ஆதிநாராயணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் வெ.நவீன் என்கிற நவநீதகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com