என்னா வெயிலு..! பெண்ணிடம் ஐஸ் கிரீமை பறித்து ருசி பார்த்த குரங்கு

கோடைவிடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.
என்னா வெயிலு..!  பெண்ணிடம்  ஐஸ் கிரீமை பறித்து ருசி பார்த்த குரங்கு
Published on

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மே தினம், சனி, ஞாயிறு என தொடர் விடுமுறையை கழிக்க சுற்றுலாப்பயணிகள் குவிந்து வரும் நிலையில், அங்குள்ள குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று (மே 3) சுற்றுலா தலம் ஒன்றில் பெண் ஒருவர் ஐஸ்கிரீம் சாப்பிட்டபடி சென்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த குரங்கு ஒன்று மின்னல் வேகத்தில் அவரது ஐஸ்கிரீமை பறிக்க முயன்றது. பயந்துபோன அந்த பெண், ஐஸ்கிரீமை கீழே போட்டுவிட்டார். உடனே ஐஸ்கிரீமை எடுத்துச் சென்ற குரங்கு மக்கள் முன்னிலையிலேயே அந்த ஐஸ்கிரீமை ருசி பார்த்தது. குரங்கின் இந்த செயலை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com