சென்னை பெருநகர மாநகராட்சிக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன..?


சென்னை பெருநகர மாநகராட்சிக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன..?
x

நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கையில் சென்னை பெருநகர மாநகராட்சிக்கான முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் கே.என் நேரு வெளியிட்டுள்ளார்.

சென்னை


சட்டசபையில் நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்து வருகிறார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் ரூ.45 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.

ஏரி குளங்களை சீரமைத்து கொள்ளளவை அதிகரிக்கவும் வெள்ள பாதிப்பை தவிர்க்கவும் ரூ.120 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ரூ.52 கோடி மதிப்பீட்டில் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படும்.

ஓட்டேரி நல்லா கால்வாய் மற்றும் விருகம்பாக்கம் கால்வாய்கள் தடுப்புச் சுவர் கொண்டு உயர்த்தவும் குப்பைகள் தேங்காமல் இருக்க பாதுகாப்பு வேலிகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சி பள்ளிகளில் ரூ. 75 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள், கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.

வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தின் கீழ், பேருந்து செல்லும் சாலைகளில் 200 கி.மீ நீளத்திற்கு ரூ.200 கோடி மதிப்பீட்டில் நடைபாதைகள் அமைக்கப்படும்.

முக்கிய இடங்களில் பொது மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் நவீன வசதிகளுடன் உயர்தர வணிக வளாகங்கள் கட்டப்படும்

கள்ளிக்குப்பம், வில்லிவாக்கம், சைதாப்பேட்டையில் உள்ள இறைச்சி கூடங்கள் நவீன வசதிகளுடன் ரூ.60 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

மயான பூமிகளில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும்.

புதிய பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் ரூ.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்

ரூ.60 கோடி மதிப்பீட்டில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.என் நேரு கூறினார்.

1 More update

Next Story