எல்லை பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்? - மத்திய அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி

எல்லை பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்? என்று மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எல்லை பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்? - மத்திய அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி
Published on

சென்னை,

லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவத்திற்கு இடையே கடந்த திங்கள்கிழமை நடந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மத்திய அரசு எல்லை விவகாரத்தில் சிறப்பாக செயல்படவில்லை என விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இந்திய எல்லைகுள் சீன ராணுவம் நுழையவில்லை எனவும் சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தினால் அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எல்லை விவாகாரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு லடாக் விவகாரத்தில் தேசத்தின் பாதுகாப்பை பாதிக்காத வகையில் உண்மை நிகழ்வுகளை மக்களிடம் பகிர வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், எல்லை பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், கேள்வி கேட்பவர்கள் தேசத்திற்கே விரோதியைப் போல ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com