"மக்களுக்கு என்ன பலன்?" - கருத்துக் கணிப்புகளுக்கு எதிராக இயக்குநர் தங்கர்பச்சான் ஆவேசம்

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
"மக்களுக்கு என்ன பலன்?" - கருத்துக் கணிப்புகளுக்கு எதிராக இயக்குநர் தங்கர்பச்சான் ஆவேசம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்து, வாக்கு எண்ணிக்கையை நோக்கி ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் வேளையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்காகக் காத்திருக்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகளை விமர்சித்துள்ள அவர், "இதை ஒழித்துக் கட்ட சட்டத்தில் இடமில்லையா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read
’தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் மக்களை சந்திப்பேன்’ - விஜய்
"மக்களுக்கு என்ன பலன்?" - கருத்துக் கணிப்புகளுக்கு எதிராக இயக்குநர் தங்கர்பச்சான் ஆவேசம்

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "கருத்துக் கணிப்பை ஒழித்துக் கட்ட சட்டத்தில் இடமில்லையா? தேர்தல் முடிந்து போனது. வாக்கு எண்ணிக்கைக்கு தேதி குறித்துள்ளார்கள். இதற்கிடையில் இந்த கணிப்பை வைத்துக்கொண்டு என்னதான் செய்யப் போகிறார்கள்? இதனால் மக்கள் அடையும் பலன் தான் என்ன? எல்லாவற்றையும் பணமாக்கத் துடிக்கும் இப்படிப்பட்ட கூட்டத்திடமிருந்து மக்கள் தப்பவே முடியாதா?’ என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com