

சென்னை,
கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு கடந்த 3 நாட்கள் நடந்து முடிந்த நிலையில், அந்த மாநாடு குறித்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா பேரிடர் காலத்தில் மன உளைச்சல், மனவலி, மனபாதிப்பு என மக்கள் பாதிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாகத்தான் குறைந்த வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும், இதற்கான ஆராய்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. விரைவில் அந்த ஆராய்ச்சியை புத்தகங்களாக வெளியிட உள்ளோம். இவ்வாறு அவா கூறினார்.