'தமிழகத்தில் விசாரணை அமைப்புகள் எந்த ஊழலை கண்டுபிடித்துவிட்டார்கள்?' - அமைச்சர் சேகர் பாபு கேள்வி

விசாரணை அமைப்புகள் தமிழகத்தில் எந்த ஊழலை கண்டுபிடித்துவிட்டார்கள்? என அமைச்சர் சேகர் பாபு கேள்வி எழுப்பினார்.
சென்னை,
முதல்-அமைச்சரின் பிறந்த நாளையொட்டி, சென்னை கொரட்டூரில் உள்ள சிவலிங்கபுரத்தில் நடைபெற்ற அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகம் முழுவதும் சோதனை நடத்தும் விசாரணை அமைப்புகள் எந்த ஊழலை கண்டுபிடித்துவிட்டார்கள்? பா.ஜ.க. அரசு சொல்வதை அமலாக்கத்துறை அறிக்கையாக வெளியிடுகிறது. சட்டமீறல், விதிமீறலின் ஒட்டுமொத்த உருவமாக விசாரணை அமைப்புகள் செயல்படுகின்றன" என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story






