மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளரிடம் பேசியது என்ன? - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

மதுரை எய்ம்ஸ் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளரிடம் பேசியது என்ன? என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளரிடம் பேசியது என்ன? - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
Published on

புதுடெல்லி,

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் டெல்லியில் நேற்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சில அதிகாரிகளை சந்தித்து சுகாதாரத்துறை தொடர்பான பல கோரிக்கைகளை முன் வைத்தார்.

இந்த சந்திப்புகள் குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றியும் பேசினோம். கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்த கேட்டோம். விரைவுபடுத்துவதாக சொன்னார்கள். மேலும் ஜம்மு காஷ்மீர், பீகார் போன்ற இடங்களில் 50 முதல் 100 மாணவர்களுடன் தற்காலிகமாக தொடங்கி இருக்கிறார்கள். அதைப்போல தமிழக அரசும் மதுரைக்கு அருகில் உள்ள சிவகங்கை போன்ற மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என்று கூறினர்.

தற்போது உள்ள சூழ்நிலையில் மதுரையில் தற்காலிகமாக மாணவர்களை சேர்க்க முடியாது. ஏனெனில் அங்கு 250 மாணவர்கள் தற்போது இருக்கிறார்கள். அருகில் உள்ள மாவட்டங்களில் தற்காலிகமாக கல்லூரியை தொடங்குவதற்கான ஆலோசனை நடந்து வருகிறது. வருகிற 16-ந் தேதி இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் முடிவை மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com