காலில் விழுந்ததை என்னவென்று சொல்வது? - எடப்பாடி பழனிசாமி விமர்சனத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி

விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அவருடைய ஆசையை சொல்கிறார் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

காரைக்குடி,

காரைக்குடியில் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், காங்கிரஸ் திமுகவிடம் கெஞ்சுகிறது என்று ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ப.சிதம்பரம், "நேரடியாக இரு கட்சித் தலைவர்கள் அல்லது தலைமையில் இருப்பவர்கள் சந்தித்து பேசுவது, கெஞ்சுவது என்றால், காலில் விழுவதற்கு என்ன பெயர் சொல்வது?" என்று பதிலடி கொடுத்தார்.

Also Read
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கோப்புப்படம்

மேலும் அவர் கூறும்போது, "ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியில் ஒரு பொருளாக பேசப்பட்டது என்பதை பத்திரிகைகளில் பார்த்தேன். அதுகுறித்து இரண்டு கட்சி தலைமைகளும் பேசி முடிவு எடுப்பாரா்கள்; யாரும் அலட்டிக் கொள்ள வேண்டாம்.

தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், காங்கிரஸ் கட்சி, தவெகவுடன் கூட்டணி சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று அவருடைய ஆசையை சொல்கிறார். அதில் என்ன தவறு?" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com