உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?- மத்திய அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன என்று மத்திய அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?- மத்திய அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

சென்னை,

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், ஓராண்டை கடந்துஉலகத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. இதற்கிடையே, இங்கிலாந்தில், உருமாறிய நிலையில் புதியவகை கொரோனா உருவானது. தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா காரணமாக பிரிட்டன் மட்டுமல்லாமல் அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் சோதனைக்கு உள்ளாக்க கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது உருமாறிய பரவுவதை தடுக்க அனைத்து விமானங்களையும் கண்காணித்து வருவதாகவும், அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகும் இதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் இந்தப் உருமாறிய கொரோனா கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, வெளிநாட்டுப் பயணிகளைத் தனிமைப்படுத்துவது குறித்து நிபுணர் குழு ஆலோசனைகளைப் பெற்று அதன் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஜனவரி 18-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com