பண்ருட்டியில் தொழிலாளி, விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை

பண்ருட்டியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டியில் தொழிலாளி, விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
Published on

பண்ருட்டி,

பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் ராஜி (வயது 45), தொழிலாளி. இவரது மனைவி கனகாம்பாள் (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜி, விஷத்தை குடித்து விட்டார்.

இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

காரணம் என்ன?

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை ராஜி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கனகாம்பாள், பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜி உடல் நலம் சரியில்லாததால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com