

சென்னை,
காணாமல் போன சிறுமியை இன்னும் மீட்க முடியாமல், இந்த தவெக அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? என்று தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
செஞ்சியில் சிறுமி காணாமல் போய் இன்றுடன் 30 நாட்கள் கடந்துவிட்டன. இன்னும் அந்த சிறுமி மீட்கப்படவில்லை. அதற்குள், செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் பகுதியில் இன்னொரு சிறுமியை கடத்த முயன்றதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஆறு மாதங்களாகியும் சிறிதும் பொறுப்பில்லாத இந்த த.வெ.க. ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கும் நிலையில், இப்போது குழந்தை கடத்தலும் அதிகரித்துள்ளது.
காணாமல் போன சிறுமியை இன்னும் மீட்க முடியாமல், இந்த த.வெ.க. அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது?
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.