

திருச்சி,
திருச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
"பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றவாளியை அவசரமாக என்கவுண்டர் செய்ய வேண்டிய காரணம் என்ன? 3 முக்கிய குற்றவாளிகளும் தானாக வந்து சரணடைந்த நிலையில் எப்படி தப்பி ஓட முயற்சி செய்வார்கள், இதில் என்ன லாஜிக் உள்ளது. ஒருவரை என்கவுண்டர் செய்து விட்டால் அந்த குற்றச்சம்பவம் குறித்த வழக்கை முடித்து விடமுடியுமா?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவினருக்கு தொடர்பு உள்ளது. போலீஸ் காவலில் இருந்தவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்திருக்கும். சரணடைந்தவரை என்கவுண்டர் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவசர அவசரமாக என்கவுண்டர் என்ற பெயரில் ஒரு உயிர் பறிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு வழக்காக இருந்தாலும் நீதிமன்றத்திற்கு செல்லும் போது தான் முழுமையான விவரங்கள் தெரியவரும்."
இவ்வாறு அவர் கூறினார்.