சூடானில் சிக்கி தவிக்கும் தமிழர்களின் நிலை என்ன? - அமைச்சர் சொன்ன தகவல்...!

உள்நாட்டு போர் நடைபெறும் சூடானில் இருந்து தமிழர், இந்தியர்களை மீட்பது நமது கடமை என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
சூடானில் சிக்கி தவிக்கும் தமிழர்களின் நிலை என்ன? - அமைச்சர் சொன்ன தகவல்...!
Published on

சென்னை,

சூடான் நாட்டில் அதிகாரங்களை கைப்பற்றும் நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது. அதிரடி ஆதரவு படைகள் என அழைக்கப்படும் துணை ராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. வீட்டிற்குள் பாதுகாப்புடன் இருக்கும்படியும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அங்கிருந்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், ராணுவ மோதல் தீவிரம் அடைந்துள்ள சூடானில் 80 தமிழர்கள் உள்ளனர் என்று வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் கூறுகையில், உள்நாட்டு போர் நடைபெறும் சூடானில் இருந்து தமிழர், இந்தியர்களை மீட்பது நமது கடமை, நேற்றிரவு வரை 80 தமிழர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "சூடானில் தவிக்கும் தமிழர்களை மீட்பது குறித்து மத்திய அரசோடு பேசி வருகிறேம் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com