

சென்னை,
தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை போலீசார் தற்போது தஞ்சைக்கு அழைத்துச்செல்கின்றனர். இந்நிலையில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜனநாயகன் படத்தில் நடித்தாரே தவிர, ஜனநாயகம் பற்றி A,B,C அறியாதவராக விஜய் இருக்கிறார். தண்ணீர் வரவில்லை என்கிற வயிற்றெரிச்சலில் யாரோ ஒருவர் திரிஷா பெயரை கூறினார். அது என்ன உலகமகா தப்பா அது. தண்ணீர் என்பது குடிப்பது தானே. அதை நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது? திரிஷா பற்றி பேசினால் ஏன் இவ்வளவு அவசரம், திரிஷா என்ன பிரதமரா? முதல்வரா? எதற்காக இவ்வளவு அவசரம்? “திரிஷாவை விமர்சித்தால் கைது செய்வார்களா? மக்கள் பிரச்சினையை கவனிப்பதில் தவெக அரசுக்கு நேரமில்லை.
எதிர்க்கட்சியினரை கைது செய்ய முனைப்பு காட்டுகிறது". மேலும், இப்படி தான் கருணாநிதியை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். இன்று அதே போல உதயநிதியை கைது செய்து வேனில் அழைத்து செல்கின்றனர். இன்று முதல் உதயநிதியை இளைய கலைஞர் என அழைப்பதற்கான வழியை விஜய் வகுத்துவிட்டார்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.