

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபு நேற்று காலமானார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 72 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்த விஎஸ் பாபு நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது உடல் திருவிக நகரில் உள்ள மின் மயனாத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது. விஎஸ் பாபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நாட்களில், அவரது உடல் நிலை குறித்த அப்டேட் முறையாக வெளியிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ், விஎஸ் பாபுவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் பற்றி பேசினார். விஎஸ் பாபு கூறியதாவது:
நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் விஎஸ் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். நாங்கள் எந்த அளவுக்கு சிகிச்சை அளிக்க முடியுமோ, அந்தளவுக்கு சிகிச்சை அளித்தோம். ஒருங்கிணைந்த மருத்துவக்குழு மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தரப்பில் இருந்து ஒரு குழுவை அனுப்பி வைத்து சிகிச்சை முறைகளை மேற்பார்வையிட வேண்டும் முதல் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அதன் அடிப்படையில் அரசு மருத்துவமனை தரப்பின் மருத்துவக் குழுவும் கண்காணித்து வந்தது. சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் என்னிடம் கூறி வந்தனர். தினசரி விஎஸ் பாபுவின் உடல்நிலை குறித்து முதல் அமைச்சர் விஜய் கேட்பார், நானும் அவரிடம் சொல்லி வந்தேன்.குணம் அடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்று நாங்கள் நம்பி இருந்தோம். அவருக்கான சிகிச்சையில் முன்னேற்றமும் இருந்தது. இரண்டு, மூன்று முறை அவர் வீடு திரும்பும் சூழலும் ஏற்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த முன்னேற்றத்தை தக்க வைக்க முடியவில்லை’ இவ்வாறு அவர் கூறினார்.