

சென்னை,
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
“அரசியல் தெரிந்தவர்கள், அரசியல் தெரிந்தவர்களிடம் நீங்கள் பேசலாம். ஆனால் அவதூறு பேசுபவர்களிடம் எதுவும் பேச முடியாது. நடிகர் விஜய் சேதுபதி சொன்ன கருத்து அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும். ஏன் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்களுக்கு அது பொருந்தாதா?
அவர் சொன்னது ஒரு பொதுவான கருத்து. இந்த கருத்தை ‘வையத் தலைமை கொள்’ புத்தகத்தில் வெ.இறையன்பு எழுதியுள்ளார். ஒரு தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்? என உலகம் முழுவதும் இருக்கும் கோட்பாட்டை அவர் எழுதுகிறார். அதை விஜய் சேதுபதி பதிவு செய்துள்ளார்.
அவர் கூறிய பொதுவான கருத்தை ஒருவரோடு பொருத்திப் பார்த்து பிரச்சினை செய்வது அவசியமற்றது. நீங்கள் ஏன் உங்களை சொல்வதாக நினைத்துக் கொள்ள வேண்டும்? அப்படியென்றால் அவர் சொன்னதுபோல் பிரச்சினைகளை கண்டு ஓடுபவர் தானா?”
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.