தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு எப்போது? - வெளியான முக்கிய தகவல்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு எப்போது? - வெளியான முக்கிய தகவல்
Published on

சென்னை,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு மார்ச் 11-ந் தேதியும் தொடங்கி நடந்து வருகின்றன. இடையே, பிளஸ்-1 ஆண்டு இறுதித் தேர்வும் மார்ச் 3-ந் தேதி முதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில், 1 முதல் 9-ம் வகுப்பு வரையில் ஆண்டு இறுதித் தேர்வு எப்போது? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் இருந்து வந்தது. ஏற்கனவே, பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ள வருடாந்திர நாள்காட்டியில், 1 முதல் 9-ம் வகுப்பு வரை இறுதி பருவத் தேர்வுகள் ஏப்ரல் 10-ந் தேதி முதல் ஏப்ரல் 24-ந் தேதி வரை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கு முன்னதாக பள்ளி தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் பள்ளி கல்வித் துறைக்கு ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால், பெரும்பாலான பள்ளிகளில் வாக்குச்சாவடி மையங்கள் செயல்படும். அதனால், முன்கூட்டியே வகுப்பறைகளை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டியது இருக்கும் என்பதால், முக்கூட்டியே 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதித் தேர்வை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனேகமாக, ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்வுகள் தொடங்கி, ஏப்ரல் 17-ந் தேதிக்குள் முடிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இது தொடர்பான, தேர்வுக்கால அட்டவணை தயாரிக்கப்பட்டு பள்ளி கல்வித் துறை செயலாளர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதித் தேர்வு தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com