

சென்னை,
தமிழகத்தில் ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் உடனாக ஆலேசனை கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு உரிய முடிவெடுக்கப்படும். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வீடு வீடாக சென்று பரிசோதனை செய்ததன் மூலம் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசின் மீது எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.