ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது தினகரன் ஒருநாள் கூட வரவில்லை தீபக் சொல்கிறார்

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது தினகரன் ஒருநாள் கூட வரவில்லை என ஜெயலலிதா அண்ணன் மகன்தீபக் கூறி உள்ளார்.
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது தினகரன் ஒருநாள் கூட வரவில்லை தீபக் சொல்கிறார்
Published on

சென்னை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது அண்ணன் மகன் தீபக் தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டி வருமாறு:--

தமிழக கவர்னர் வந்த போதும் ஜெயலலிதாவுக்கு சுய நினைவு இல்லை. ராகுல் காந்தி வந்தபோதும் சுய நினைவு இல்லை. கவர்னரிடம் ஜெயலலிதா கட்டை விரலை தூக்கி காட்டினார் என்பது பொய். கவர்னர் வந்தபோது நானும் இருந்தேன். ராகுல்காந்தி வந்த போதும், ராஜாத்தி அம்மாள் வந்தபோதும் நான் இருந்தேன். ராகுல்காந்தி வந்தபோது அவருக்கு ஜெயலலிதாவை பார்க்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அப்போது ஜெயலலிதாவுக்கு சுய நினைவு இல்லை.

ஜெயலலிதா காவிரி பிரச்சினை பற்றி யாரிடமும் விவாதிக்கவில்லை. ஆலோசிக்கவில்லை. ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி வரமாட்டார் என்று எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். அப்பல்லோ நிர்வாகத்தினர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து நன்றாக இருக்கிறார். உடல்நலம் தேறி வருகிறார் என்று பிரதமருக்கு தெரிவித்து விட்ட னர்.

ஜெயலலிதா என்னைப் பார்த்தபோது என்னிடம் பேசவில்லை. அவருக்கு என்னைப் பிடிக்காது. என்னைப் பார்த்தால் கோபப்படுவார். அவர் என்னை புரிந்து கொள்ள வில்லை. அதை நான் பொருட்படுத்தவில்லை. ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு வந்தபோது நானும், சசிகலாவும் சற்று தொலைவில் உட்கார்ந்து இருந்தோம். டாக்டர்கள் அவரை சுற்றிலும் நின்று சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தனர்.

ஜெயலலிதா இறப்பதற்கு முதல் நாள் நான் மும்பையில் இருந்தேன். அப்போது எனக்கு பூங்குன்றன் தான் டெலிபோன் செய்து வரச்சொன்னார். உடனே நான் புறப்பட்டு வந்தேன். ஜெயலலிதா உடலில் அறுவை சிகிச்சை செய்து பேஸ்மேக்கர் கருவி பொருத்தினார்கள். எதுவும் நடக்கவில்லை.
ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக சசிகலாதான் கையெழுத்து போட்டார். நான் எந்த கையெழுத்தும் போட வில்லை.

அ.தி.மு.க.வை பொறுத்த வரை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி , கோகுல இந்திரா இவர்கள் எல்லாம் யார்? இந்த கட்சிக்காக வாழ்ந்தவர்கள். ஆனால் இந்த தினகரன் யார் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது ஒருநாள் கூட அவர் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com