போலீசார் வாகனங்களை ஓட்டும் போதுசீட்பெல்ட், ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்:சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தல்

போலீசார் வாகனங்களை ஓட்டும் போது சீட்பெல்ட், ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
போலீசார் வாகனங்களை ஓட்டும் போதுசீட்பெல்ட், ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்:சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தல்
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் வாகனங்களை ஓட்டும்போது கண்டிப்பாக சீட்பெல்ட், ஹெல்மட் அணிய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.

ஆய்வு

இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலக மைதானத்தில் போலீஸ் வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாகன ஓட்டுனர்களிடம் குறைபாடுகளை கேட்டறிந்தார். குறைபாடு உள்ள வாகனங்களை உடனடியாக சரி செய்யுமாறு ஆயதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனை முருகனுக்கு உத்தரவிட்டார்.

சீட்பெல்ட்

மேலும் அவர் பேசும் போது, நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். எந்த வித விபத்தும் ஏற்படா வண்ணம் வாகனம் ஓட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது, சைபர் குற்றப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு புருஷோத்தமன், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனைமுருகன், ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

ஆய்வு கூட்டம்

முன்னதாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

போதைப்பொருள்

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், நிலுவையிலுள்ள வழக்குகளை உரிய விசாரணை நடத்தி விரைவாக முடிக்க வேண்டும். மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பவர்கள், ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் தூத்துக்குடி குற்ற வழக்கு தொடர்புத்துறை உதவி இயக்குனர் ராஜதுரை, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வக்கீல் முருகபெருமாள், திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வக்கீல் முருகேசன், ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்- I அரசு உதவி வக்கீல் செய்யதுஅலி பாத்திமா, கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - II அரசு உதவி வக்கீலு ஆலன்ராயன், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், கோடிலிங்கம், உன்னிகிருஷ்ணன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com