தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்தார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
Published on

சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் வெளியே வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

பள்ளிகள் திறப்பது எப்போது?

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகளால் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கொரோனா 3-வது அலை பரவும் என எதிர்பார்க்கக்கூடிய நிலையில், டாக்டர்கள், பெற்றோர்களின் ஆலோசனைகளை பெற்று பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். பெற்றோர்கள் தைரியத்துடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வர வேண்டும். மேலும் சட்டமன்ற கூட்டத்தில் முதல்-அமைச்சரின் முடிவுகளின் படியே நீட் தேர்வு குறித்த நடவடிக்கை இருக்கும்.

கட்டணம்

தமிழகத்தில் கோர்ட்டு உத்தரவின்படி தனியார் பள்ளிகளில் தவணை முறையில் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 40 சதவீத கட்டணம் முதல் தவணையாகவும், 35 சதவீத கட்டணம் 2-வது தவணையாகவும் செலுத்துவதற்கான உத்தரவை நடைமுறைப்படுத்த தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com