விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமை தொகை எப்போது கிடைக்கும்? முதல்-அமைச்சர் முக்கிய அறிவிப்பு

மத்திய அரசால் கூட தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமை தொகை எப்போது கிடைக்கும்? முதல்-அமைச்சர் முக்கிய அறிவிப்பு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது;

"தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் கூட தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை. பொருளாதார வளர்ச்சியில் 9.69% உடன் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு புதிய உச்சம் பெற்றுள்ளதாக மத்திய அரசே கூறியுள்ளது

தமிழ்நாடில் மகளிர் உரிமை, புதுமை பெண், காலை உணவு, விவசாயிகள் பயிர் காப்பீடு, இலவச மின் இணைப்பு உள்ளிட்ட திட்டங்களைப் பார்த்து எடப்பாடி பழனிசாமி புலம்பி கொண்டு இருக்கிறார். எந்த தகவல் தெரியாமல் அறை வேக்காட்டு தனமாக அறிக்கை விட்டு கொண்டு இருக்கிறா.

ஜூலை 15 முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும். அந்த முகாமில் மகளிர் உரிமை திட்டத்தில் விடப்பட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம். மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியான பெண்களுக்கு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் ரூ.1,000 வழங்கப்படும்."

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com