அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்

சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்
Published on

சென்னை,

சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் நடைபெற்று வரும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் என்.டி.ஏ கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள நிலையில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கவில்லை.

சென்னை எழும்பூரில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பொறுமையாக எங்களின் கூட்டணிக்கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து, உணர்வுபூர்வமாக நாங்கள் நிறுத்துகிற அத்தனை வேட்பாளர்களும் வெற்றி பெறக்கூடிய சூழலில் தொகுதி பங்கீடு அமையும். எப்பொழுதும் தேர்தல் வருகிற போது ஸ்டாலின் தான் சிறுபான்மை மக்களை காப்பதாக கூறுவார்.

ஆனால் இஸ்லாமிய மக்களுக்காக இந்த அரசு என்ன செய்தது. அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருந்த அரசு அதிமுக. இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கே பாதுகாப்பு இல்லை. அப்படிபட்ட நிகழ்வுகள் தான் இப்போது தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது. இதுவரை அதிமுகவோ, எங்கள் கூட்டணியை சேர்ந்த தலைவர்களோ அந்த கட்சியுடன் (தவெக) கூட்டணி தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும். மார்ச் 30-ம் தேதிதான் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இன்னும் காலம் நிறைய இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com