மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது? - அமைச்சர் மரிய வில்சன் சொன்ன பதில்

தமிழகத்தின் நிதிநிலை குறித்து இரண்டு வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளார்.

நிதித்துறை அமைச்சர் வில்சன்
Published on

நாகை,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வருகை தந்தார். பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஆண்டுதோறும் வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு வருவது வழக்கமாக இருந்தாலும், இந்த ஆண்டு மிகவும் விசேஷமானதாக இருக்கிறது. விரைவில் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதால், ஆரோக்கிய அன்னையின் அருளைப் பெற வந்தேன்.

வெள்ளை அறிக்கை

தமிழகத்தின் நிதிநிலை குறித்து இரண்டு வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். அதில் எந்தவித மறைவு இல்லாமல் மக்களுக்கு முழு விவரமும் தெரிவிக்கப்படும். மேலும், மதுரை மாநகராட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக முழு அறிக்கை கேட்கப்பட்டுள்ளது, அனைத்து தணிக்கை அறிக்கைகளும் பரிசீலனையில் உள்ளது.

மகளிர் உரிமைத்தொகை

மகளிர் உரிமைத்தொகை வழங்கலில் ஏற்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது, பிற மாநில பெண்களுக்கும் தொகை வழங்கப்பட்டதாக வரும் தகவல்கள் குறித்து தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது, ரூ.2500 உரிமைத்தொகை வரவிருக்கும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்.

மேலும் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com