தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் போது முக‌க்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற உத்தரவு

அலுவலகங்களில் பணிபுரியும் போது முக‌க்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் :தனியார் நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் போது முக‌க்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற உத்தரவு
Published on

சென்னை

பணிபுரியும் போது மாஸ்க் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். பணியிடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டு உள்லது தமிழக சுகாதாரத்துறை அதன் விவரம் வருமாறு :-

அறிகுறி உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் சோதனை செய்ய வேண்டும்.

ஊழியர்கள் முகக் கவசம் அணிந்து இருக்கிறார்களா என்பதை உறுதி செய்திட தேவையான சூப்பர்வைசர்கள் அல்லது மேலாளர்களை நியமிக்கவேண்டும். பணியிடங்களில் ஒரு நபருக்கு இடைவெளி 2 மீட்டர் உள்ளபடி பணி இடத்தை மாற்றி அமைத்திட வேண்டும்.

பணியிடங்களில் இடைவெளிவிட்டு மாற்றி அமைக்க முடியாத சூழலில் வெளிப்படையான திரைகள் மூலம் 2 மீட்டர் இடைவெளியை உறுதி செய்திட வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com