

சென்னை,
சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், பாஜகவின நயினார் நாகேந்திரன் இடையே காரசார வாதம் ஏற்பட்டது.
நீட் தேர்வை கொண்டுவந்தது திமுக - காங்கிரஸ் தான் - நயினார்
நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. இப்போதாவது நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வருமா ? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
5.71% பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது - நயினார்
பாஜக ஆளும் மாநிலங்களில் ஏற்படும் கலவரம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவாதிக்கவா ? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவில் தமிழகத்தில் தான் பெண்களுக்கான பாதுகாப்பும், குழந்தைகள் பாதுகாப்பும் சிறப்பாக உள்ளது
மத்திய அரசு தெரிவித்துள்ளது.பாஜக ஆளும் மாநிலங்களில் தான் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக குறிப்புகள் ஆதாரங்கள் உள்ளது - மு.க.ஸ்டாலின்
தேர்தலுக்கு தான் பொங்கல் தொகுப்பு 3 ஆயிரம், மகளிர் உரிமை தொகை 5 ஆயிரம் வழங்கப்படுகிறது
5 கோடை காலம் வந்தது, 28 மாதங்களுக்கும் சேர்த்து கொடுத்தால் நன்றாக இருக்கும் - நயினார்
ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 லட்சம் சொன்னீங்களே அது என்னாச்சு ? - முதல்-அமைச்சர்
நயினார் நாகேந்திரன் கூறும் போது மோடி மஸ்தான் வேலை செய்துவிட்டார்கள் என்று கூறுவது பிரதமரை தான் கூறுகிறார்களோ என்று நினைக்கிறேன் - முதல்-அமைச்சர்
7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது பாஜகதான் - நயினார் நாகேந்திரன்
நயினாரின் கருத்தை கூட்டணியிலுள்ள அதிமுக ஏற்குமா? தங்கம் தென்னரசு
ஆர்எஸ்எஸ் தூய்மையான இயக்கம்.தேச பற்றோடு இருக்கும் இயக்கம்.யாரும் குறை சொல்ல முடியாது
தமிழ்நாடு தனிநாடு வேண்டும் என போராட்டம் நடத்தப்பட்டது - நயினார் நாகேந்திரன்
தேச தந்தை விரோதியா எதிரியா? அவரை கொள்ள திட்டம் தீட்டியது ஆர்எஸ்எஸ், அப்படியான இயக்கம் தூய்மையான இயக்கம் என்று கூறுவது சரியா? - ரகுபதி
செல்வபெருந்தகை - சுதந்திர போராட்டத்தில் ஈடுபடமாட்டோம் நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என எழுதிக் கொடுத்த இயக்கம் ஆர் எஸ் எஸ்.
சேகர்பாபு - மகாத்மா காந்தி கொல்லப்பட்ட போது நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சாவர்க்கரை இன்றுவரை கொண்டாடுகிறீர்களே. அது என்ன ?
நயினார் - காலங்கள் செய்யாததை கிரகங்கள் செய்யும். நேற்று அங்கிருந்தவர்கள் இன்று இங்கிருக்கிறார்கள். நாளை அங்கு இருப்பார்கள்.
கிரகநிலையை பொறுத்தவரை அஸ்டமத்தில் சனி உங்களுக்கு உள்ளது - தங்கம் தென்னரசு
நிதியமைச்சர் தினந்தோறும் காலண்டர் பார்க்கிறார். அதான் அஷ்டமத்தில் சனி என்று சொல்கிறார் - நயினார்
நயினாருக்கு சனி இருப்பதை அவரே ஒப்புக் கொண்டார் - தங்கம் தென்னரசு
நாங்கள் சூரியவம்சம். நீங்கள் கவலை பட வேண்டாம் - ரகுபதி
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.