கைலாசா எங்கே உள்ளது? நித்யானந்தா எங்கே உள்ளார்? - நீதிமன்றம் கேள்வி

கைலாசாவுக்கு ஐ.நா. சபை அங்கீகாரம் உள்ளதாக நிதியானந்தாவின் சீடர் பதிலளித்தார்.
கைலாசா எங்கே உள்ளது? நித்யானந்தா எங்கே உள்ளார்? - நீதிமன்றம் கேள்வி
Published on

மதுரை,

மதுரை ஆதின மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக்கூடாது என்று தனி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை அடுத்து, நித்யானந்தா மதுரை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

அதாவது, கைலாஷா நாடு எங்கு உள்ளது, அங்கு எப்படி செல்வது, நித்யானந்தா எங்கு உள்ளார், கைலாஷா நாட்டுக்கு செல்வதற்கு விசா, பாஸ்போர்ட் வேண்டுமா உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது.

இதற்கு நித்யானந்தாவின் தரப்பில் ஆஜரான அவரது சீடர் அரச்சனா, ஆஸ்திரேலியா அருகே யுஎஸ்கே என்கிற கைலாசா ஐக்கிய நாடு என்ற தனி நாட்டில் நித்யானந்தா வசித்து வருவதாக கூறினார். மேலும், இந்த நாடு ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடு எனக் கூறிய அர்ச்சனா, நித்யானந்தா தரப்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்க அனுமதி கோரினார். இதை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை, வழக்கை ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com