சென்னையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்


சென்னையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்
x

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (09.10.2025) 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

சென்னையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் விபரம்;

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (09.10.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-14ல் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சிஎஸ்ஐ சர்ச் அருகில் உள்ள விளையாட்டு மைதானம், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-30ல் ரெட்டேரி, ஜவஹர்லால் நேரு 200 அடி சாலையில் உள்ள உமாயா மஹால், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-37ல் வியாசர்பாடி, எம்.கே.பி நகர் 3வது பிரதான சாலையில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளி, அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-86ல் அயப்பாக்கம், ஐ.சி.எப். காலனியில் உள்ள ஶ்ரீ வாரு பார்த்தசாரதி பேலஸ், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-101ல் கீழ்பாக்கம், விளையாட்டு திடல் தெருவில் உள்ள ஜெ.ஜெ. உள்விளையாட்டு அரங்கம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-123ல் கே.பி.தாசன் தெருவில் உள்ள எஸ்.ஐ.ஈ.டி. திருமண மண்டபம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்–10) வார்டு-131ல் டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள சமுதாய கூடம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-152ல் ஆற்காடு சாலையில் உள்ள மண்டல அலுவலகம், ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12), வார்டு-167ல் நங்கநல்லூர், 100 அடி சாலையில் உள்ள ஸ்கேட்டிங் மையம், அடையாறு மண்டலம் (மண்டலம்-13), வார்டு-179ல் பெசன்ட் நகர், மீன் சந்தை அருகில் உள்ள ஸ்கேட்டிங் மைதானம், பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-188ல் மடிப்பாக்கம், பாலையா கார்டன், பஜனை கோயில் தெருவில் உள்ள ருக்மணி மஹால் ஆகிய 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

1 More update

Next Story