தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்?

பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை தூத்துக்குடியில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்?
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி பீச்ரோடு துணைமின் நிலையத்தில் நாளை மே 21-ஆம் தேதி வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக, மாநகரின் பிரதான கடலோரப் பகுதிகள், வணிக உள்கட்டமைப்பு வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:-

இனிகோநகர், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், கடல் சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள உப்பளப் பகுதிகள், எம்.ஜி.ஆர் நகர், முடுக்கு காடு.

லயன்ஸ் டவுண், தெற்கு காட்டன் ரோடு, வடக்கு காட்டன் ரோடு, காசு கடை பசார், சுனோஸ்காலனி, செயின்ட்பீட்டர்கோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, ஜார்ஜ் ரோடு, பெரியகடை தெரு, தெற்கு மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு.

கணேசபுரம், பாத்திமா நகர், இந்திரா நகர், புல்தோட்டம், டெலிபோன்காலனி, தாமஸ் நகர், பனிமயநகர், தாமோதரநகர், வண்ணார்தெரு, பெருமாள்தெரு, சிவந்தாகுளம்ரோடு.

சண்முகபுரம் பிராப்பர், சந்தை ரோடு, காந்திநகர், மேல சண்முகபுரம் 2-ஆவது தெரு, முனியசாமிபுரம், CGE காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர், ராஜபாண்டி நகர், பெரியசாமி நகர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com