சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்?

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்?
Published on

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னையில் 24.05.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை: சிட்கோ தொழிற்பேட்டை, செக்டர் 3-இல் உள்ள 1வது குறுக்கு பிரதான சாலை, 1 மற்றும் 2வது லேன், 2 மற்றும் 3வது தெரு, பஜனை கோவில் தெரு, நல்ல கிணறு தெரு, கன்னியம்மன் கோவில் தெரு, குள்ளன் தெரு, பாடசாலை தெரு, கோரமண்டல் டவுன், சி.டி.எச். சாலை, மேனாம்பேடு சாலை, சிட்கோ தொழிற்பேட்டை 10 மற்றும் 11வது தெரு, சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு கட்டம்.

முகப்பேர் : 2வது பிரதான சாலை, ரெட்டிப்பாளையம் பிரதான சாலை, முகப்பேர் பிரதான சாலை, எம்.ஜி.ஆர் சாலையில் பின்புறம் உள்ள C19, C18, C15 மற்றும் C16 பகுதிகள், அம்பத்தூர் தொழிற்பேட்டை (தெற்கு பகுதி).

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com