இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
Published on

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று (24-05-2026) மற்றும் நாளை (25-05-2026) நீலகிரி, கோயம்புத்தூர் ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், திண்டுக்கல் தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும், லேசான இடியுடன் கூடிய மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இரவு 10 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஈரோடு, சேலம், நாமக்கல், திண்டுக்கல், திருப்பத்தூர், மதுரை, நீலகிரி, திருப்பூர், பெரம்பலூர், தேனி, தென்காசி, திருவண்ணாமலை, சிவகங்கை, வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, ராணிப்பேட்டை, கோவை, தூத்துக்குடி, தருமபுரி, விருதுநகர் திருநெல்வேலி, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, திருவள்ளூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், கரூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருப்பூர் ஆகிய இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com